பிறந்தநாள் வாழ்த்துக் கவி

16.1.20 அன்று
உனக்கு பிறந்தநாள்
ஏழைகளுக்கு கவலை
மறந்த நாள்

நீ தலையில் சூடுவது
பூவை அல்ல
சேவை

நீ சீத்தலைச்சாத்தனார்
படைத்த மணிமேகலை அல்ல
ராமலிங்கம் படைத்த மணிமேகலை

நீ கழுத்தில் மணியும்
முகத்தில் கலையும் கொண்ட மணிமேகலை

மணிமேகலை ஐம்பெரும்
காவியங்களில் ஒன்று
நீயும் காவியமாக போகிறாய் வீர வேலுநாச்சியாரின் உரிமையை வென்று

நீ சிவகங்கையில் பிறக்காது சிதம்பரத்தில் பிறந்த வேலுநாச்சியார்

நீ அன்னை
மகேஸ்வரி எழுதிய கவிதை வரி

நீ பிறந்தது தையில்
அதனால் போடுகின்றாய் கிழிந்த ஏழைகள் வாழ்வில் தையல்

பாரி ஓரி காரி
இவர்களுக்கெல்லாம்
சொல்லுகிறேன் சாரி
ஏனென்றால் இவர்களைவிட அல்லி கொடுக்கின்றாய் நீ வாரி
அதனால் நீ ஒரு மாரி
தீயவர்களுக்கு நீ வேற மாறி

நீ மீட்டெடுத்த வேலுநாச்சியாரின் உரிமையைத் தான் உன் கண்களில் மையாய் பூசுகிறாய்

கதிர்காமத்தில் வாழும் கதிர் நீ
உன்னைப் பற்றி
அறியாதோர்க்கு புதிர் நீ

உன் குரல் குரல் அல்ல
அது திருக்குறள்
உன் விரல் விரல் அல்ல
அது மாணிக்கப் பரல்

நீ ஓராண்டில் நூறாண்டு மீண்டும் வாழ அன்போடு வாழ்த்துகிறேன்

நீ ஊராண்டும்
நூறாண்டும்
பாராண்டும் வாழ அன்போடு வாழ்த்துகிறோம்

எழுதியவர் : குமார் (15-Jan-20, 8:53 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 1321

மேலே