இந்த உலகம்

============
கைத்தூக்கி விட்டோரின்
கையொடித்துப் போட்டுவிட்டுக்
கைநழுவும் கையோடு
கைகுலுக்கும் உலகமிது.
**
கையூட்டு நீட்டுமெனில்
கைகூப்பும் கடமையிலே
கைநாட்டு வந்துநிற்க
கைகாட்டும் உலகமிது.
**
கைராசி நல்லதெனக்
கைக்காசு கேட்டுவரும்
கைநிறையும் வேளைவர
கைகழுவும் உலகமிது
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Jan-20, 1:27 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 548

மேலே