ஓர் அழகிய பனிக்காலம்

கொட்டும் பனிக்காலம்
அணைத்தபடி நீ!
உளறாமல் பேசு என்கிறாய்..?
கற்ற தமிழும் களவுபோனது
நீ அருகில் இருக்க....!

நீ கவிங்கனா?
கவிதை சொல் பார்ப்போம் என்கிறாய்..?
உனதழகை கவிதையாக்க
அகராதியை புரட்டிப்புரட்டி பழிக்கிறேன்...
உன் இதழையாவது கொஞ்சம் தா..
வரிகளாக்கிக் கொள்கிறேன்...!

மௌனமாய் இதழ்கள் முணுமுணுக்க
போர்வைக்குள் வெட்கப்பட்டே மறைகிறாய்...
மயங்கித்தான் போகிறது மனது
உன்மீதான காதல் கூட...!

போர்வைக்குள் நாம் இணைய...
இதயங்கள் காதல் மழையில் நனைய...
சன்னலோரம் எட்டிப்பர்த்த வெள்ளிச்சிதறலும்
வெட்கப்பட்டு கரைந்தே சென்றது...!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (16-Jan-20, 11:08 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 270

மேலே