இயற்கையில் இறைவன்

மீனமாய்க் கூர்மமாய் வரகமாய்
மாலவன் விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்து
அவதரித்தது எல்லா உயிர்களிலும் .நான்
இருக்கின்றேன்' என்று மாந்தர்க்கு உணர்த்தவே
இவ்வளவு ஏன்' தூணிலும் உள்ளான் துரும்பிலும்
உள்ளான் என் நாராயணன்' என்று பாலன்
பிரஹலாதன் கூற வெகுண்ட தந்தை இரணியன்
'இதோ இந்த தூணில் உள்ளானா அவன் உன்
அரி ' என்று கேட்டு தூணைத் தன் உடை வாளால்
தாக்க, தூண் பிளந்து அக்கணமே நரஹரியாய்
வந்தான் நாரணனும் அசுரன் இரணியனை
அழித்து அவன் பாலகன் ப்ரஹலாதனைக் காக்க
இவ்வுலகில் நாம் என்னும் அஃறினைப் பொருளிலும்
சூட்சுமமாய் உள்ளான் அவன் என்று உணர்த்த
பூமி வெடிக்கிறது எரிமலையாய் இது
வெறும் கல்லும் மண்ணுமே என்று நாம் என்னும்
பூமியின் உயிர்த் துடிப்பு .......

பொங்கல் திருநாளின் இரண்டாம் நாள் இன்று
மாட்டுப் பொங்கல்..... ஆம் உழவனுக்கு
உயிர்த்தோழன் மாட்டிற்கு பண்டிகை... ஆம்
மிருகத்திலும் கண்ணன் உள்ளான் என்று கூற
பால் தரும் பசு 'காமதேனு' வாகிறாள் .. பெண்ணாய்
பெண் தெய்வமாய்.. பசுவைக் கும்பிடுகிறோம்
எத்தனை உயர்ந்த எண்ணம் இது ....

அர்த்தமுள்ள இந்து மதம்
வாழ்க்கைக்கு நல்லிணக்கம் நவின்றான்
வேத வித்தகன் .....
மதம் நல்லதையே போதிக்கிறது
மதம் ஒரு போதும் ஏற்றாது....
எம்மதமும் அப்படியே என்று நினைப்பவன் நான்
நாம்தான் மதத்தை சரியாக அறியாது
மாதத்தில் ஏறி நிற்கின்றோம்

இயற்கையின் ஒவ்வோர் அசைவிலும் இறைவன்
கடலிலும் கடல் காலையிலும் ஓடும் கங்கை எல்லாம்
வீசும் காற்றிலும், தென்றல், புயலிலும்
பார்க்கும் மரங்களில் கொடிகளில் வாழும்
உயிர் இனங்களில் எல்லாம் ..... அவனே

இயற்கையே இறைவன் இறைவனே இயற்கை

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (16-Jan-20, 12:44 pm)
Tanglish : iyarkkaiyil iraivan
பார்வை : 390

மேலே