வாழ்த்துக்கள் என்பது சரியான பாடமா அல்லது வாழ்த்துகள் என்ற பதம் சரியா

ஒவ்வொரு பண்டிகைக்கும் நாம் வாழ்த்து சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம் . நம்முடைய மரபும் கூட .வாழ்த்துக்கள் என்ற வார்த்தை சரியா அல்லது வாழ்த்துகள் என்ற வார்த்தை சரியானதா என்ற கேள்வி நம்முள் எழுகிறது .சரி அதற்கான பதில் மற்றும் அதன் சரியான இலக்கணம் என்ன என்பதை கீழே பார்ப்போம் .

அதற்கு முன்னால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் .உ என்ற ஒசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா ?(பசு பந்து போன்றவை ).இவை தனது இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம் அதிகரித்து ஒலித்தால் அவை முற்றியலுகரம் .

இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன .

நெடில் தொடர் குற்றியலுகரம் -- மாடு ,பாகு

ஆயுதத்தொடர் குற்றியலுகரம் -- எக்கு

உயிர்த்தொடர் குற்றியலுகரம் -- வரகு ,வரவு ,செலவு ,மிளகு ,சாக்கு

மென்தொடர் குற்றியலுகரம் -- சங்கு ,பங்கு ,பந்து ,அம்பு ,வம்பு

வன்தொடர் குற்றியலுகரம் --கொக்கு ,மக்கு ,பாக்கு ,சாக்கு ,

இடைத்தொடர் குற்றியலுகரம் --எய்து ,அல்கு

எந்த சொற்களுக்கு பின் க், ச் ப் என்ற மெய் எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி ?

இலக்கணம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம் ..

நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் புள்ளி வைத்த எழுத்து வராது . உதாரணம் மாடு ,ஆடு -- இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடு க்கள் ,மாடு க்கள் என்று வராது .

பசு, மரு ,கணு போன்ற குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் புள்ளி வைத்த எழுத்துக்கள் வரும் . உதாரணம் பசுக்கள் ,மருக்கள் ,கணுக்கள் .

குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது . செலவு ,வரவு --செலவுகள் ,வரவுகள் என்று எழுத வேண்டும் .

க் ,ச் ,ட்,த் ,ப் ற் போன்ற எழுத்துக்களுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது.

வாக்கு -- வாக்குகள்

கணக்கு --கணக்குகள்

நாக்கு -- நாக்குகள்

வாத்து -- வாத்துகள்

வாழ்த்து -- வாழ்த்துகள்

எனவே வாழ்த்துக்கள் என்பது தவறு .வாழ்த்துகள் என்பதே சரி .

தோப்புகள் என்றால் தோப்பு என்ற சொல்லின் பன்மை .

தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்காப்பட்ட கள் என்று பொருள் .

வாழ்த்துகள் என்பது வாழ்த்து என்ற சொலின் பன்மை .

நன்றி !

எழுதியவர் : வசிகரன்.க (16-Jan-20, 1:13 pm)
பார்வை : 542

சிறந்த கட்டுரைகள்

மேலே