மலர், அவள், நான்

மலருக்கு தெரியாதோ
அதன் அழகு
அதன் வாசம் அதில்
ஊரும் தேன் ......
மலருக்கு தெரியும்
இவை எல்லாம் அதனால்தான்
தன்னை சுற்றி சுற்றி மொய்க்கும்
வண்டிற்கு தன தேனை
விருந்தாய் அளித்தோதோடல்லாமல்
உண்டபின் தன் தொடைமேல்
மயங்கும் வண்டிற்கு
இடமும் தந்தது .... யார்
மலர்தானே........

இதனை அறிந்தும் என் மலரே
காதல் மங்கையே நீ
இன்னும் என் என்னை இப்படி
காக்க வைக்கிறாய்
நம் காதல் பயணத்திற்கு
உன் முத்துக்கள் தந்து
என்னோடு உறவாட தயக்கம் ஏன்
சொல்வாயோ நீ
நீ மலர் என்றால் பெண்ணே
நான் வண்டல்லவா.... நீயே சொல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jan-20, 1:30 pm)
பார்வை : 245

மேலே