ஒருதலை காதலியாய்

என் நாணம் கொண்டு
நான் தீட்டிய முதல் ஓவியம்
நான் உன் மீது கொண்ட
அந்த காதல் தான்

நான் உன் தோழன் என்று நீ
உன் தோள் கொடுக்கையில்
நான் உன் வாழ்க்கை என்று
உன் மார்பு சாய்ந்தேன்
நீ தந்திட்ட உன் கரங்களை
என் வாழ்நாள் முழுதும் பற்றிக்கொள்ளத்தான் என்று
அந்த கரங்களை விட மறுப்பு தெரிவித்தேன்
விளையாட்டாய் உன் பெயரோடு
என் பெயரை சேர்த்து நீ
உச்சரிக்கையில்
என் வாழ்க்கையே நீதான் என்று
எனக்கு நானே திருமண காகிதம்
எழுதிக் கொண்டேன்

காகிதம் பல கொண்டு
என் காதலன் உனக்கு
பல்லாயிரம் கவி வடித்தேன்
உன் அழகை காண
என் அழகை மேலும் அழகு படுத்தினேன்

நிறமில்ல என் கனவுகளுக்கு
உன்னால் நிறம் கொடுத்தேன்

நான் வரைந்திட்ட
என் காதல் ஓவியத்திட்கு
மீதம் இருப்பது
நான் கொண்ட அந்த
உணர்வுகள் மட்டுமே
அத்தனையும் சேர்த்திட்டு
மொத்தமாய் உன் முன் வந்து
நின்றேன்
என் ஓவியத்திட்கு உயிர் கொடுக்க
எனக்கு முன்னாள் வேறொருத்தி
உயிர் கொடுத்து சென்று விட்டால்
ஏனென்றல்
நான் தீட்டிய அந்த ஓவியத்திட்கு
இதயம் இல்லை என்பதால்,
இன்று உயிரற்று கிடக்கிறது
என்னை போன்று
ஒருதலை காதலியாய்

எழுதியவர் : ரிஷாந்தி (16-Jan-20, 2:55 pm)
சேர்த்தது : Rishanthi
பார்வை : 168

மேலே