நான் அவளைக் காதலிக்கிறேன்

நான் அந்த அழகியின் தரிசனத்துக்காக
காத்திருந்து தரிசனம் ஆனபின்
என் பாதையில் செல்பவன்
நான் அந்த தேவதையைக் காதலிக்கிறேன்
மனதால் உள்ளத்தால்
ஆனால் அவள்..... இதுவரை என்னை
ஒரு முறைக்கூட பார்க்கவில்லையே
வீதியில் வலம் வரும் தெய்வத்தை
வீதி மக்கள் பார்க்கலாம் சேவிக்கலாம்
அந்த தெய்வம் அவர்களில் யாரைப்
பார்த்ததோ அந்த தெய்வம்தான்
அதை அறியும் .....
இவளுக்கு இன்னும் என் மேல்
இரக்கம் வரவில்லையே என் கோரிக்கையை
என் காதலை ஏற்க ....

இது என்ன எந்தன் காதல்
ஒருதலைக்கு காதலா .....

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (16-Jan-20, 6:16 pm)
பார்வை : 169

மேலே