அவள்

நான் அவள் கொண்டையில் வைத்திட
அந்த சிவப்பு ரோசாவைப் பறிக்க போனேன்
கொஞ்சம் நேரம் போனது ...... அவள் பொறுமை
கொஞ்சம் இழந்து நான் மலர்க்கொய்ய சென்ற
பூஞ்சோலை வந்தடைந்தான் .... என்னைக்கேட்டாள்
' இந்த ரோசாவைப் பறிக்க இத்தனை நேரமா' என்றாள்
நான் சொன்னேன்' அந்த ரோசாவைப் பார்த்தேன்
அதன் அழகில் உனைக்கண்டேன்
என்னை மறந்தேன் அப்படியே நின்றுவிட்டேன்' .
என்னை அறியாது, இதோ இப்போது நீ வந்து
என்னை இப்படி கேட்டவரை....... என்றான்
அவள் பதில் ஏதும் சொல்லாது என்னை வந்து
அணைத்துக்கொண்டாள் மலர்க்கரத்தாள்
அதில் அந்த ராசாவின் மென்மைக்கண்டேன்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (16-Jan-20, 8:02 pm)
Tanglish : aval
பார்வை : 120

மேலே