மரணம்

மெல்ல நகர்கிறது
என் வாழ்க்கை
மரணமே உன்னை நோக்கி..

காந்தம் போல் இழுத்து கொள்கிறாய்
சில சமயங்களில் விலக்கியும் விடுகிறாய்

எந்தன் பிறவி பயன் முடிந்து விட்டதோ இல்லையோ
என் இலக்குகள் பல இன்னும் துவங்க கூட இல்லை..

தைரியம் கொடு
தற்கொலைக்கு அல்ல இயற்கை மரணித்தகிற்கு

ஆசையாய் நெருங்குவதலோ என்னவோ என் கனவுகள் நிராசை ஆகி விடுகிறது

முயற்சிக்கிறேன் தோல்வி முந்திக் கொள்கிறது

அடுத்த வாய்ப்பு கிட்டவில்லை மீண்டும் முயற்சி செய்ய

அயற்சிகள் ஒருபுறம்
பயிற்சியாளர்கள் மறுபுறம்
என்ன செய்ய

வழி கேட்டேன் வலி கொடுத்தாய்
பழி போட முடியும்
இழிவு என்று விட்டேன்

அழிவு ஆரம்பித்தது
மரணமே உன்னோடு முடியாதது எதுவுமே கிடையாது

முடியட்டும் என் வாழ்க்கையின்
முகவரி..

எழுதியவர் : senthilprabhu (16-Jan-20, 10:04 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : maranam
பார்வை : 109

மேலே