யார் சொன்னது

யார் சொன்னது?
=======================================ருத்ரா

அந்த மரக்குச்சியின் நுனிகளுக்கு?
அது
பட்டாம்பூச்சி ஆனது!
யார் சொன்னது
அந்த கூழாங்கற்களுக்கு?
அவை
வெள்ளிப்பனி மலை
ஆனது.
யார் சொன்னது
அந்த ஜன்னலுக்கு இரும்புக்கம்பிகள்
என்று?
அதற்கும் ரோஷம் வந்து
தங்க முலாம் பூசிக்கொண்டது.
காதல் என்று
யார் இங்கே கிசு கிசுத்தது?

=====================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (17-Jan-20, 9:14 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : yaar sonnathu
பார்வை : 168

மேலே