ஜல்லிக்கட்டு ராஜா

கெண்டை மீன் துள்ளும் கண்கள்
வண்டுபோல் உருளும் கருவிழிகள்
கொண்டையில் செண்பகபூ வாயில்கரும்பு
மண்டையில் மூளையிலா மாமன்மவளே !

பொங்கலும் பொங்கி கொண்டாடியாச்சு
பொங்கல் மாட்டுக்கும் கொடுத்தாச்சு
சிங்கமாமன் ஜல்லிக்கட்டுமாடி உயிரோடுவந்தாச்சு
உங்கப்பன் தைக்கணக்கு என்னாச்சு ?

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jan-20, 10:45 am)
பார்வை : 71

மேலே