இயற்கை

நிலத்தின் மேல் விளையும்
நமக்கு உணவாகும் நெல்
ஏனைய பயிர்களுக்கு சமமாகுமா
நிலத்தின் கீழ்க் காணும்
பொன்னும் வெள்ளியும் மற்றும்
நில வாயு 'பெட்ரோலியம்' ஆகிய
பெரும் தனம் பயக்கும் பொருட்கள்
உள்ளவரை நம்பினால் உணவு
பொருட்கள் உண்டு.... பொன்னும்
பொருளும் தருவது அஃதொன்றுமில்லை
அதனால் விலை நிலத்தை பாதுகாப்போம்
காடும் கழனியும் இன்றி வாழ்தல் அரிது
நகரின் எல்லையை விஸ்தரிக்கும்
அரசாங்கம் இதை கொஞ்சம் கவனத்தில்
வைத்தல் நலம் தருமே எல்லார்க்கும்
மழை நீரை வீணாக்கல் கூடாது
'மழை நீர் சேர்த்தல்' ஒவ்வொருவருக்கும்
தலையாய கடனே ...... நீரின்றி உலகில்லை
மழை நீரை சேர்ப்போம் நில நீர் பெறுக
துன்பமில்லை வாழ்க்கைக்கு இயற்கையோடு
ஒன்றி வாழ்வோம் நாமே

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (17-Jan-20, 11:27 am)
Tanglish : iyarkai
பார்வை : 802

மேலே