மருத்துவ வெண்பா - காராம் பசுவின் பால் – பாடல் 51

நாட்டு இன மாடுகளுக்குப் பிறக்கும் கன்றுக் குட்டிகளில் நாக்கு முதல் மடிக்காம்பு வரை முழுவதும் கருப்பாக உள்ள பசுக்கள் ‘காராம் பசுக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை போடும் கன்றுகள் கூட சமயங்களில் ‘காராம் பசு’வாக இருப்பதுண்டு.

இப்படி அரிதாகப் பிறக்கும், இந்தப் பசுக்களின் பாலில் மருத்துவ குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் பால் கெட்டியாகவும், இதிலிருந்து தயாரிக்கப்படும் நெய், வாசனையுடனும் இருக்கும் என்பது ஆச்சரியமான செய்தி.

முற்காலங்களில் புகழ் பெற்ற கோயில்களில் காராம் பசுவின் பாலில்தான் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். இன்றும்கூட காராம் பசுவின் பாலை வழிபாட்டுக்கு பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. அந்த பசு மாடு ஒன்றின் விலை 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. தாராபுரம் பகுதியில் சில விவசாயிகள் காராம் பசுவை வளர்த்து வருகிறார்கள்.

காராம் பசுவின் பால்
நேரிசை வெண்பா

கண்ணோ யகற்றுங் கயரோகந் தான்போக்கும்
மண்ணிலுள்ள பல்தோடம் மாற்றுங்காண் – பெண்ணே!
இரத்தபித்தம் போக்கும் இராச வசியங்
கருத்தபசும் பாலதனைக் காண். - தேரையர்

பொருளுரை: கருப்புநிறப் பசுவின் பால் விழிப்பிணி, காசம் மற்றும் பல விதமான தோடங்களை மாற்றிச் சரியாக்கும்., ரத்தபித்தம் இவைகளை நீக்கி உடலுக்கு வனப்பு தரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-20, 4:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

மேலே