அஷ்டலட்சுமிகள்

சும்மா நின்றாலே போதும்
உயரமான உயரம் முதலாமவரை
முதன்மையாய்க் காட்டும்..
பரபரப்பைச் சற்று
சேர்த்துக் கொண்டதில்
அமர்க்களம் இங்கு சற்று அதிகம்...
அது பார்க்க மிகவும் அற்புதம்...
ஆடை அலங்காரம் நாடுபவர்...
அகங்காரம் சற்றும் நாடாதவர்...

இயல்பாய் இருப்பதே
இவருக்கு அழகென்பதை
மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்..
அலட்சியத்தை அள்ளி வீசுகிறார்...
சிரமம் இல்லாமல் சிகரம் தொடுகிறார்...
சவாலான பந்துகளிலும் சிக்சர் போடுகிறார்...
இரண்டாமவர் இங்கு...

தனியாய் இருந்தாலும்
குழுவாய் இருந்தாலும்
கம்பீரம் விட்டுப் போவதில்லை... அதில்
வசீகரம் இருக்கத் தவறுவதில்லை...
அதுதான் மூன்றாமவரின் சிறப்பு...
சொல்ல இன்னும் நிறைய இருக்கு...

நாலாமவர்.. நலமுடன்
பவனி வருகிறார் தமிழ்
இவரை வாழ்த்த... இவர்
தமிழை வாழ்த்த...
இவர் வழி தனி வழி... அதனால்
உயரும் பிறர் விழி...
எளிமையாய் இருப்பதே
இவருக்கு மிக அழகு...
வேறென்ன வேண்டும் பிறகு...

கருப்புக் கண்ணாடி போட்டவர்... அவர்
திட்டமிட்டதை திட்டமிட்டதை விடவும்
தீர்க்கமாகச் செய்யத் தெரிந்த
தீர்க்கதரிசி... கருப்புக் கண்ணாடி
போட்டாலும் போடாவிட்டாலும்
இவர் ஒரு வடிவுக்கரசி...
வொர்க்கிங் ஸ்ட்ரெஸ் மெத்தட் இவருக்கு
கைககட்டி சேவகம் செய்யும்...
லிமிட் ஸ்டேட் மெத்தட்
கைகட்டாமல் சேவகம் செய்யும்...

அந்தோணி விஜயா...
அக்மார்க் சிரிப்பு... அது
எப்போதும் இவரது இருப்பு...
மல்லிப்பூக்கள் கடன் கேட்கும்
வெள்ளை நிறத்தை இவரது சிரிப்பில்...
பொறியியல் விசைகளைச்
சரியாய்க் கணிப்பதே இவரது ஆயுதம்...
அதற்கேற்றாற் போல்
கட்டமைப்புகளை வடிவமைப்பது
இவரது கேடயம்...

நேர்த்தி இவரது நடை... உடை...
பாவனைகளில் மட்டுமல்ல
கல்லூரிக் காலங்களில்
புத்தகங்களைக் கையில்
வைத்திருக்கும் பாங்கினிலும்தான்...
ஆரம்பத்திலிருந்தே தொடர்பு எல்லைக்கு
வெளியே இருப்பதால்
காயத்ரி மந்திரம் போலவே
காயத்ரியும் எனக்கு அந்நியம்..
அதனாலென்ன ஜிஸிஇ
என்பதால் எல்லோரும் போலவே
இவரையும் எனக்குத் தெரியும்...

எட்டாமவர்... அவர்
எட்டாத புகழ் எட்டியவர்...
அழகிய பூக்களுக்கு ஷூக்களும்
அழகாய் இருக்கின்றன
என எதுகை மோனை
கொண்டு எழுதலாம்...
அவ்வாறு எழுதாமல்... அவரது
ஆராய்ச்சி... விஞ்ஞானம்...
சமூகம்... இறையன்பில்...
சில நூறு ஆண்டுகள்
வாழ்ந்து செய்ய வேண்டியதை
ஒரு நூறாண்டில் வாழ்ந்து
செய்ய நினைக்கிறார்...
அதில் வெற்றியும் காண்கிறார்...
என்று எழுதிப் பாராட்டுகிறேன்...

அஷ்டலட்சுமிகள்
அருமையாய் வாழ்ந்திட
நட்பு என்றும் தொடர்ந்திட
வானமும் வசந்தமும் வசப்பட
அன்புடன் வாழ்த்துகிறேன்...
😀👏👍💐🙏🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (19-Jan-20, 6:49 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 131

மேலே