இயற்கை வளம் 9

====================
பிழைப்பற்று வாடும் பெருந்துன்ப வாழ்வில்
அழைப்பின்றி வாட்டும் அனல்.81.
*
அனலெனும் வாய்கொண் டகிலம் புசிக்கக்
கனன்றிடும் சூரியன் காண்.82.
*
காண்கிற வெய்யோன் கடலைக் குடித்தற்குள்
பேணுமியற் கையெமது பேறு.83.
*
பேறுகள் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திட
ஆறுகள் பாயணும் ஆம்.84.
*
ஆமென்ற வாக்கால் அகிலம் சிறந்திட
நாமென்று நாவால் நவில்.85.
*
நவிலுதல் மூலம் நவயுக மொன்றைப்
புவிகாண வோர்சேவை யாற்று.86.
*
ஆற்று மணலரித்து அள்ளி நிரப்புகையில்
ஈற்றில் எதுமிஞ்சு மிங்கு.87.
*
இங்கு நமக்கியற்கை ஈந்த கடனதனை
எங்கு அடைத்திடுவோ மெண்ணு.88.
*
எண்ணி முடிப்பதற்குள் எண்ணிலடங் காவளத்தைக்
கண்ணியமாய் கொட்டுமியற் கை.89.
*
கைகொடுக்க நன்றியிலா காசினியில் கேளாமற்
மெய்கொடுத்துக் காக்குமியற் கை..90.
*

தொடரும்.....
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Jan-20, 1:32 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 575

மேலே