அன்பே

நான் பார்க்கும் சிலரில்
உனை நினைவுபடுத்தவென்றே சிலர்
மறந்திருக்கும் கண நேரங்களும்
அவர்களால்
புதுப்பிக்கப்படுகிறது.
ஓயாத அலைகளாய் நீ
மணல்திட்டுக்களான மனதில்
நுழைந்துகொண்டே இருக்கிறாய்.
நுழையும் நொடிகளெல்லாம்
பூப்பூக்க
மணந்துகிடக்கறதடி மனம்..

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (20-Jan-20, 8:30 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : annpae
பார்வை : 335

மேலே