அழகு குட்டி செல்லம்

மழலை முகம் பார்த்ததுமே
மலரும் நம் அகமே
செல்லக் குழந்தையின் சிரிப்பில்
மறந்திடும் நம் கவலைகளும்.
உனக்கே உனக்கு ஒரு பாட்டு
பாடிடத்தான் ஆசை எனக்கு
பாடத் தெரியாது ,
எழுதுகிறேன் உனக்காக.
உன் மீது பொறாமை எனது இடத்தை பிடித்து கொண்டாய் என்று.
ஆனாலும் என் அக்காவுக்கு நானே முதல் செல்ல மகள்.
உன்னில் காண்கிறேன் என் அக்காவை குழந்தையாக.
எப்போது என் பேர் சொல்லி அழைப்பாய் எனக் காத்திருக்கும் அன்பு சித்தி எழுதுகிறேன் என் செல்லக்குட்டிக்காக.

எழுதியவர் : ThenVisu (20-Jan-20, 10:01 pm)
சேர்த்தது : ThenVisu
Tanglish : alagu kutti chellam
பார்வை : 3226

மேலே