பிரிவு

உணர்வது உறங்காமல்
அலைகடலென ஆர்ப்பரித்தாலும்
உள்ளமட்டுமிங்கே
ஆழ்கடல் அமைதியாய்

துயில் கொள்ளும் வேளையிலும்
தூங்க விடாமல் துரத்தி வரும் அவள் நினைவு
தூரத்தே இருக்கின்றாய் தினம் தினம்
துன்பம்தனை தருகின்றாய்

மழை ஓய்ந்த வானமாய்
மனசு கிடக்குது சப்தமின்றி
ஆனாலும் இங்கே இலை சொட்டும்
தண்ணீராய் கண்ணீரில் என் கண்கள்

எழுதியவர் : karuppasamy (20-Jan-20, 10:02 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : pirivu
பார்வை : 130

மேலே