காவல் தெய்வம்

அன்னையவள் அடிவயிற்றில்
அலுமினிய குண்டு துளைத்தபோதும்
அவள் குருதி சிந்தி குற்றுயிராய்
தவித்த போதும் கூக்குரலிட்டு அழவில்லை

பச்சிளம் குழந்தையது
பாலுக்கு ஏங்கி அழுதபோதும்
முளையிருந்தும் முடிச்சவிழ்க்க முடியாது
மூச்சடக்கி மார்பில் மழலையவன் முகம் புதைத்தேன்

முடிந்தது குண்டு
முழக்கம் மட்டுமில்லை
முத்துப் பிள்ளையிவன்
மூச்சுக் காற்றும் தான்

கண்ணே நீயும்
கதறி அழுதிருந்தால்
கர்ப்பிணி உன் அன்னை நானும்
கண்டியிலே கற்பிழந்திருப்பேன்

தாய் மானம் காத்திட்ட தங்கமே
காவல் தெய்வம் நீ எனக்கு
காத்திருப்பேன் உன் வரவிற்கு
கருவறையில் மீண்டும் நீ உதிப்பதற்கு

எழுதியவர் : கருப்பசாமி (20-Jan-20, 10:05 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : kaaval theivam
பார்வை : 46

மேலே