பலி

ஆயுதம் ஏந்திய சாமியெல்லாம்
அமைதியாய் வீற்றிருக்க
ஆண்டவன் படைத்த மனிதன் இங்கே
அரிதாரம் பூசி ஆண்டவன் நானென்று
அவதாரம் எடுக்கின்றான்

ஆடு மாடு கோழியென வாயில்லா
ஜீவனை வதம் செய்கின்றார்
காக்கும் தெய்வங்களே கருவறையில்
கண்மூடி கல்லாய் இருந்தது போதும்

உரக்கச் சொல்லுங்கள் தெய்வங்களே இனி
உலகில் உயிர்ப் பலி வேண்டாமென்று

எழுதியவர் : கருப்பசாமி (21-Jan-20, 8:28 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : pali
பார்வை : 81

மேலே