நூலகத்தின் பயன்--------டிஜிட்டல் யுகத்திலும் நூலகம் தேவைதான்

நூலகம் அறிவை வளர்க்கும் ஓர் இடமாகும். வாழ்வியல், வரலாறு, இலக்கியம், நிலநூல், மேற்கோள் நூல்கள், சிறுகதைகள், மனோதத்துவம், வார, மாத சஞ்சிகைகள், நாளிதழ்கள் அனைத்தும் நூலகங்களில் கிடைக்கும்.

நம் நாட்டில் தேசிய நூலகம், மாநில நூலகம், என பொது நூலகங்களும்,மற்றும் நடமாடும் நூலகங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் படித்துப் பயனடையும் வகையில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கியப் பங்காற்றுகிறது.

“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளர்ச்சியடையும். அதற்கு முதுகெலும்பாகத் திகழ்வது நூலகமே.

தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் நூலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மாணவர்களாகிய நாமும் நூலகம் தரும் பயம் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம்.

எழுதியவர் : ராஜ சேகரன் / (22-Jan-20, 3:33 am)
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே