பிட்சை

காலை விடியல் அழக
கதிரவன் உதிப்பதழகு
அந்தி வானம் அழகு
ஆதவன் மறைவது அழகு

காதலுக்கு பொய் அழகு
கவிதைக்கு சொல் அழகு
சிரிக்கும் பெண் அழகு
சிந்திக்கும் ஆண் அழகு

நீலவானம் அழகு அதில்’
நீந்தும் விண்மீன் அழகு
அமைதியான கடல் அழகு
ஆர்ப்பரிக்கும் அலை அழகு

பூத்துக் குலுங்கும் மலர் அழகு
பூப்பெய்திய பெண் அழகு
புன்னகை தவழும் முகம் அழகு
பூமியில் வாழ்வது அழகு
ஆடும் மயில் அழகு
பாடும் குயில் அழகு
பேசும் கிழி அழகு அதிகம்
பேசாத பெண் அழகு
துல்லிகுதூக்கிம் மீன்கள் அழகு
துள்ளி ஓடும் புள்ளிமான் அழகு
தத்தி தாவும் முயல் அழகு
தவழும் மழலை அழகு

அய்யனார் சாமி அழகு
அவர் கையிலிருக்கும்
அறிவாளும் அழகு
தாலாட்டும் தென்றல் அழகு
தாய் மடியின் துயில் அழகு
அழகென்று ஆயிரம்
ஆண்டவன் படைப்பில் இங்கே

காண வழியில்லை இங்கே
கண்ணிரெண்டும் குருடனாய்
கரம் நீட்டி கேட்ட்கின்றேன் பிட்சை
உலகம் காண உங்களிடம்

கருணை உள்ளம் கொண்டு
மண்ணில் புதைக்கும் கண்ணை
என் போன்ற சக
மனிதரின் கண்ணில் புதைப்பீர்

எழுதியவர் : கருப்பசாமி (23-Jan-20, 10:10 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
பார்வை : 41

சிறந்த கவிதைகள்

மேலே