திராவிடர் பொய்

திராவிடர் பொய்

பெரியார் குறிப்பாக தமிழ் நாட்டின் இந்துக்களை
மட்டுமேயேனோ அழிக்கப் பாடு பட்டார் என்று இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. .பாரதி
சொன்னதை விட , காந்தி சொன்னதை விட பண்டைய இலக்கியங்களில் சொன்னதைவிடவா
ஈ.வே.ரா அதிகம் சொல்லி விட்டார். இவர்கள் சொன்னதைத்தான் கொஞ்சம்சிரிப்பு வரும்படி
நெல்லைக் கண்ணன் பாஷையில் ஈ வெ ரா பேசி சொல்லி பாமரர் களைச் சுண்டி யிழுத்துள்ளார்.

பெரியார் 1971 இல் இப்படி ஆபாச போஸ்டர்களைவண்டியில் ஊர்வலமாக எடுத்துச்
சென்றார் என்பது உண்மை. இது தவிர காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே மாவட்டங்கள்
தோறும் தி. க . காரர்கள் ஐயர் ஓட்டல் முன்பாக 10 பேர்கள் கூ டி பிராமணாள் என்று
சொல்லாதே. , ஆரியன்என்று சொல்லாதே என்று ஓட்டலுக்கு போவோரையும் தடுத்து
அசிங்கமாக நடந்து கொண்டார்கள்
..
1961- -1962 இல் நான் 10 அல்லது 11 ஆம் வகுப்பு படித்த சமயம் பகல் 1 மணி யளவில்
பள்ளி விடும் சமயம் நான் கண்ட காட்சி. நான் வேலூர் ஊரிசு பள்ளியிலிருந்து தெற்கு
போலீஸ் நிலையம் நோக்கி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது தென்னை
மரத் தெருவினுள் சுமார் 4 அல்லது 5 மாட்டு வண்டிகளில் வண்ண வண்ணக் கலரில்
பெயிண்ட் தீட்டப் பட்ட இந்து சாமிகளின்உருவச் சித்திரங்கள் பக்கவாட்டில் தொங்க
விட்டபடி ஜாஸ் குழல் டிரம் வாத்தியம் முழங்கசென்றது .நான் வீட்டிற்குப் போகாமல்
வண்டியைத் தொடர்ந்து அவைகளை நோட்டமிடடே பின் சென்றேன்.அதில் சிவனும்
மோகினியும் நிர்வாணமாக அணைத்தபடியும் ஐயப்பன் குழந்தை பிறப்பை காட்டியிருந்தது.
சிவனின் விந்து பீச்சியடிப்பதாகவும் அது தாமரை மலரில் குழந்தை களாக பிறப்பதாகவும்
இன்னும் சிவனும் பிரும்ம விஷ்ணு மூவரும் அம்மணமாக அனுசியா முன் நிற்பதாகவும்
அவர்களை குழந்தையாக மாற்றுவதை யும்., இந்திரன் நிர்வாணமாக அகலிகையை
புணர்வது சேவல் ஓமகுண்டம் முனிவரையும் வரைந்திருந் தனர். இதுபோல் மாவட்டத்
தலைநகரில் எல்லாம் நடந்துள்ளது. பலநேரங்களிலும் இதுபோல் நடத்தியுள்ளார் கள்.

1971சம்பவம் மட்டும் இப்போது வெளிவந்துள்ளது.. சமீபத்தில் கூட இதுபோன்ற ஊர்வ லம்
வேலூரில் 1980களில் நடந்துள்ளது. தி. க. வை தண்டிக்க எந்த நாய்க்கு தைரியம் வரும்..
இவர்கள் எல்லோரும் வழக்கு மன்றத்தில் அப்படி நாங்கள் ஊர்வலம் போகவில்லை என்று
அப்போதே போய் சொல்லித் தண்டனையில் தப்பித்தவர்கள். அப்போதிருந்த போலிசும்
இந்த குழப்பவாதிகள் ,15 நாள் ரிமாண்டோடு திருப்தியடைந்து விட்டு விட்டார்கள்.

எழுதியவர் : பழனிராஜன் (24-Jan-20, 11:26 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

மேலே