மனம் இணைவோம்

மனம் இணைவோம்...
கரம் சேர்ப்போம் அறம் செய்வோம்
மனம் இணைவோம் மனிதம் வளர்ப்போம்
புறம் ஒழிப்போம் மரம் வளர்ப்போம்
இயற்கையோடு சிரிப்போம்
இயற்கையாய் சிரிப்போம்
இதயம் இணைந்து சிரிப்போம் !
பொய்முகம் களைவோம் மெய்யுறவு கொள்வோம்
எம்மதமும் சம்மதம் என்பதைவிட்டு
மதமே இல்லை என்ற மார்க்கம் கொள்வோம்!
விண்ணைத்தொடும் வீரனைவிட
மண்ணைத்தொழும் உழவனை மதிப்போம்
உறவுகளை உயிர்ப்பிப்போம் - பிறர்
உணர்வுகளை மதித்திடுவோம் !
கடல்நீரை குடிக்கமுடியாது
கடுங்கோபத்தால் நன்மை விளையாது
ஆனந்தமாய் வாழவேண்டின்
பேராசை துறப்போம்!
கெடுப்பதல்ல நம் வேலை - பிறரை
உயர்த்த கொடுப்போம் நம் தோளை
அன்பில் திளைப்போம்
ஆனந்தத்தில் களிப்போம்!
பிறரை குறையாய் பார்க்கும் - நம்
மனக்கறையை அழிப்போம்
பெற்று தந்த சுதந்திரத்தை - நாம்
நாளும் பேணிக்காப்போம் !
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (24-Jan-20, 2:53 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : manam INAIVOM
பார்வை : 84

மேலே