246 கைக்கூலி வாங்குவோரைக் கொன்றாலும் போதாது – கைக்கூலி 2

கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

அல்லினிற் களவுசெய் பவரை வெஞ்சிறை
யில்லிடும் பண்பினுக் கியைந்த மாக்களே
எல்லினில் எவரையு மேய்த்து வவ்வலாற்
கொல்லினும் போதுமோ கொடியர் தம்மையே! . 2

- கைக்கூலி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”இரவினில் திருட்டுத் தொழில் செய்யும் திருடர்களைத் தண்டித்து கொடிய சிறையிடும் சிறந்த பண்புடன் கூடிய முறைமன்ற நீதிபதிகளே!

பகல் நேரத்தில் எல்லோரையும் ஏமாற்றிக் கைக்கூலி வாங்குவதால், லஞ்சம் வாங்கும் கொடியவர்களைக் கொன்றாலும் அக் குற்றத்திற்குப் போதுமான தண்டனையாகுமா?” என்று கைக்கூலி வாங்குபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று இப்பாடலாசிரியர் வலியுறுத்துகிறார்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை முன்சீப்பாகப் பணி செய்து முறைசெய்தவர்.

அல் - இரவு. வெஞ்சிறை - கடுங்காவல். எல் - பகல்.
பண்பினுக் கியைந்த மாக்கள் – பண்புடைய நீதிபதிகள்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-20, 3:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே