பேனாவின் வலிமை

அநீதிக் கெதிராய் குரல் கொடுத்தாலும்
அரசியல் வாழ்வு முடிந்தாலும்
வாய்மைக்கு எதிரான வழக்கு தோற்றாலும்
வாரிசு யாரென வாக்களித்தாலும்
வஞ்சினம் கொண்டு வந்சகத்துடன்
ஆயுதம் ஏந்தி வெடிப்பதிங்கே
பத்திரிக்கை ஆசிரியனுக்கு எதிராய் வன்முறை
அன்றாட செய்திகளையும்
அரசியல் நிகழ்வுகளையும்
ஆண்டி அரசனென்ற அச்சமின்றி
அச்சிடுவோர்க்கு தினமும்
அன்னை பூமியில் கிடைபதேன்னவோ
அடி உதைதான்
குருதி சிந்தினாலும் இங்கே
குரல் கொடுப்போம்மனித உரிமைக்கு
உயிரிழந்தாலும் இங்கே உரமிடுவோம்
உண்மை எனும் பயிருக்கு
வீழ்ந்தாலும் இங்கே வீறு கொண்டு
எழுவோம்
எம்மை எரித்தாலும் இங்கே புதிய
எழுச்சியுடன் பிறப்போம்
எழுத்தாளனுக்கு மரணமுண்டு
என்றும் இல்லை மரணம்
எங்கள் பேனாவிற்கு
வரலாறு படைக்கும்
வலிமை மிக்க பேனா முனையதனை
வன்முறையின் துணை கொண்டு
வாளெடுத்து வீசியவரெல்லாம்
வீழ்ந்து விட்டார் இங்கே
வரலாறு படைத்தது
வாழ்வதிங்கே வலிமை மிக்க
பேனா முனையதுவே.

எழுதியவர் : கருப்பசாமி (25-Jan-20, 9:46 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
பார்வை : 89

மேலே