ஒரு தலை காதல்
💞💞💞💞💞💞💞💞💞💞💞
*கவிஞர் கவிதை ரசிகன்*
💞💞💞💞💞💞💞💞💞💞💞
பெண்ணே!
உன்னை விட்டு
நான்
வெகுதொலைவில் இருந்தாலும்......
உன் பக்கத்தில் தான்
இருக்கிறது
என்னுடைய மனம்....
புல்லாங்குழளில்
நுழைந்த காற்று
சங்கீதமாக
வெளியே! வருவது போல்...
ஏன் இதயத்துக்குள்
நுழைந்த நீ
கவிதையாக
வெளிவருகிறாய்...
என் கவிதைக்கு
உறவாகி
என் நினைவுக்கு
நட்பாகி
என் காதலுக்கு மட்டும்
ஏன் பகையானாய்?
உன்னை
மறந்து விடவேண்டும்
என்ற நினைத்தேன்...
ஆம்!
மறந்துவிட்டேன்
உன்னை அல்ல...
உன்னை மறக்கணும் என்ற எண்ணத்தை...!
உன்னை
தொடரலாம் என்றால்
கால்கள் முன்வரவில்லை
உன்னை விட்டு
பிரியலாம் என்றால்
மனம் முன்வரவில்லை....
நீ எனக்கில்லை என்று
உறுதியாகத் தெரிந்த பின்னும் உன்னையே!
ஒவ்வொரு நொடியும்
நினைத்து ...நினைத்து உயிர் வாழ்கிறேன்....
நீ வேண்டுமானால்
எனக்காக
பிறந்திருக்காமல்
போகலாம்
ஆனால்
நான் பிறந்தது
நிச்சயம் உனக்காகவே....!
*கவிஞர் கவிதை
ரசிகன்*
💞💞💞💞💞💞💞💞💞💞💞