ரத்த வேட்டை-5

அந்த பிசாசீன் நெஞ்சில் எனது அப்பா சிலுவையை அடித்து இறக்க முயன்ற அதே வினாடி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாய்கள் எங்களைச் சுற்றி வளைத்தன. வவ்வால்கள் எங்களை மொய்த்துக் கொண்டன. சிலுவையை பிடித்திருந்த என் அப்பாவின் கையை ஒரு நாய் பாய்ந்து கவ்வியது. அவர் நாயுடன் போராடினார். பிற நாய்கள் அவரைக் குதறத் தொடங்கின. கைகால்களில் எல்லாம் அவரைக் கடித்து வைத்தன. எப்படியோ சமாளித்து எழுந்தார் என் அப்பா. பையிலிருந்து புனித நீரை எடுத்து நாய்களின் மீது வீசினார். நாய்கள் தெறித்து ஓடின. பின் என் கையைப் பிடித்துக் கொண்டார். நாங்கள் இருவரும் ஓடினோம்.

பின்னால் நாய்கள் எங்களைத் துரத்தி ஓடிவந்தன. நாய்கள் நெருங்கும் ஒவ்வொரு நொடியுலும் என் அப்பா புனித நீரை நாய்கள் மீது தொளித்தார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த பாழடைந்த அரண்மனையில் இருந்து தப்பித்து வெளியே வந்தோம். விரைவாக எங்கள் குடிலை அடைந்தோம். கர்த்தரின் அருளில்தான் அங்கிருந்து தப்பித்தோம்.

எங்கள் குடிலுக்கு வந்த பின்தான் என் தந்தையைக் கவனித்தேன். நாய்கள் அந்நியாத்துக்கு அவரைக் குதறி இருந்தன. அவரின் தூய வெண்ணிற ஆடை அழுக்கடைந்து ரத்தக்கறை படிந்திருந்தது. அவர் நாய்களுடன் போராடியதாலும், ஓடி வந்ததாலும் தளர்ந்து போய் இருந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதன் அவசியத்தை உணர்ந்தேன். ராபின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தேன். ஒருவாரம் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்றார் மருத்துவர்.

அப்பாவை மருத்துவமனைக்கு அனுமதித்தப் பின் எனக்கு மிகப் பயமாக இருந்தது. அந்த சாத்தான் எப்போது வந்து என் ரத்தத்தைக் குடிப்பானோ என்று திகிலாக இருந்தது. யாரோ என்னை பின் தொடரும் உணர்வு எனக்கு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இரவில் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை. நான் இறக்க விரும்பவில்லை வாழ விரும்பினேன். எனக்கு நிறைய கனவுகள் இருந்தன. எனக்கென்று தனிப்பட்ட ஆசைகள் இருந்தன. அத்தனையையும் விட்டுவிட்டு அந்த சாத்தானுக்கு இரையாவதை நான் விரும்பவில்லை.

அப்பா எனக்கு தொடர்ந்து தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார். கர்த்தரிடம் முறைட்டு ஜெபம் செய்யச் சொன்னார். ஒருநாள் அப்பாவுக்கு மாற்று உடைகள் அவசரமாக தேவைப்பட்டன. ஏற்கனவே இருந்த உடைகள் அழுக்கடைந்து இருந்தன. ராபின் அருகில் இல்லாததால் நானே சென்று எடுத்து வராலாம் என்று கிளம்பினேன். நேரம் இரவாக இருந்ததால் அப்பா என்னை தடுத்தார். தான் சமாளித்துக் கொள்வதாக சொன்னார். நான் விரைவில் வருவதாக சொல்லிச் சென்றேன். இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சர்ச் குடிலுக்கு கிளம்பினேன். வரும் வழியில் என்னை யாரோ பின்தொடரும் உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. பாதையில் ஆட்கள் நடமாட்டமே இல்லை. நான் இருசக்கர வாகனத்தை நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். யாரும் இல்லை.

மேலே செல்லச் செல்ல புகை மூட்டமாக தென்பட ஆரம்பித்தது. நான் வாகனத்தை ஓட்ட தடுமாறினேன். திடீரென நாய்களின் ஊளை ஒலி கேட்க ஆரம்பித்தது. எனக்கு பயம் கூடியது. நான் பயணித்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் நின்று விட்டது. நான் கிக்கரை என்ன உதைத்தும் அது இயங்கவில்லை. என்னை யாரோ கவனிக்கும் உணர்வு முன்பிலும் அதிகமானது. நான் திரும்பி பார்த்தேன் அந்த சாத்தான் புகை மூட்டத்தின் நடுவில் இருந்து கொண்டு பயங்கரமாக சிரித்தான்.

“ஹா..ஹா..ஹா..” எனக்கு சர்வாங்கமும் ஒடுங்கியது. கைகால்கள் உதறலேடுத்தன. நான் வாகனத்தை வேகமாக கிளப்பிவிடும் உத்தேசத்தடன் கடைசி முயற்சியாக கிக்கரை உதைத்தேன். “ஓ மை ஜீசஸ்.” அவ்வாகனம் அப்போதும் கிளம்பவில்லை. அவன் என்னை சிரித்தபடியே நெருங்கிக் கொண்டிருந்தான். மைர்கூசொரியும் அவன் சிரிப்புச் சத்தம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருந்தது.

நான் வாகனத்தை அங்கே விட்டுவிட்டு ஓடினேன். நாய்களின் ஊளை ஒலி என்னை தொடர்ந்து துரத்தியது. எங்களது குடிலுக்கு ஓடிவிடும் உத்தேசத்துடன் வேகமாக ஓடினேன். சர்ச் வாசலை அடைந்தேன். ஆலயத்திற்கு உள்ளே ஒடி விடும் நினைப்புடன் ஓடினேன். கர்த்த்ரரின் ஆலயத்திற்குள் எந்த தீய சக்திகளாலும் நுழைய முடியாது. படிக்கட்டுகள் வரை வந்து விட்டேன். பிறகுதான் உணர்ந்தேன் அன்று நான் சுத்தமாக இல்லை. விலக்காகிருந்தேன். அதோடு என்னால் உள்ளே நுழைய முடியாது. எனவே நான் எங்களது குடிலுக்கு ஒடி நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டேன். நாய்களின் ஊளை இங்கேயும் கேட்க ஆரம்பித்தது. எனக்கு புரிந்து விட்டது. என் கதை முடியப் போகிறது. அதற்குள் எனக்கு நடந்ததை எல்லாம் சொல்லி விட இதை எழுதுகிறேன். இதைப் படிக்கும் யாராவது அந்த சாத்தானை அழிக்க வேண்டும் என்ற ஆசையோடு இதை எழுதுகிறேன். தயவு செய்து அந்த தீய ஆவியை அழியுங்கள். எனக்கு நடந்தது போல பிறருக்கு நடக்க கூடாது. இந்த அறையில் திடிரென ரத்த வாடை வீசுகிறது. அவன் என்னை நெருங்கி விட்டான் என்பதை நான் உணர்கிறேன். அவன் என்னை கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நான் உணர்கிறேன். திடீரென பயங்கர சத்தம் கேக்கிறது. “ஆ இதென்ன... அந்த சாத்தான்....”

டைரி வரிகள் இதோடு முடிந்து போயிருக்க மேற்கொண்டு புரட்டினேன். காய்ந்து போன ரத்த துளிகள் தான் இருந்தன. ஜூலியை அந்த பேய் கொன்று விட்டதை உணர்ந்தேன். டைரியில் படித்த ஜூலியின் அனுபவங்கள் என்னை பெருத்த அதிர்ச்சிக்குள்ளாகியது. பேய்கள் எல்லாம் மூடநம்பிக்கைகள் ஏமாற்று வேலைகள் என்று நம்பிக்கொண்டிருந்த எனக்கு முதல் முறையாக அதிர்ச்சிக் காத்திருந்தேன். இது மனிதர்களிடம் மோதுவது போல அல்ல இது, நிஜ பேயிடம் என்பதை உணர்ந்தேன். ஜூலியின் மரணத்திற்காகவும் அவளது மோசமான அனுபவத்திற்க்காகவும் நான் வருந்தினேன்.

நேரம் மாலை ஆகிருந்தது. பாஸ்டர் விக்டரிடம் நான் மேற்கொண்டு இதைப் பற்றி விவாதிக்க விரும்பினேன். அவரைச் சந்தித்தேன்.

“பாஸ்டர் நீங்க கொடுத்த டைரிய படிச்சேன். உங்க டாட்டர் ஜூலியோட நிலைக்காக வருந்துகிறேன். எனக்கு மேற்க்கொண்டு தகவல்கள் தெரியனும். அப்புறம் என்ன ஆச்சு.?”

“அவளோட உடல் மட்டுமே கிடந்தது. உடம்புல துளி ரத்தம் பாக்கி இல்லாம அந்த சாத்தான் அவளோட ரத்தத்தைக் குடிச்சுட்டான். ஜூலியின் மரணத்தோட அது நிக்கல. அது இன்னும் தொடர்ந்துட்டு இருக்கு. பலபேரோட ரத்தத்தை அவன் குடிச்சுட்டு இருக்கான்.”

“அவன் இன்னுமா அலையுறான்.?”
“ஆமாம்.. பலிவாங்குற வெறியோட அவன் இன்னும் அலைஞ்சுட்டு இருக்கான்.”

“ஏன் அவன் அப்படி ஆனான்.?”

“எனக்கு தெரியல. என் மகளோட மரணம் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துடுச்சு. என்னால அவனை அழிக்க முடியல. நீங்கதான் அவனை எப்படியாவது அழிக்கனும். உங்களால அது முடியும்.”

“கண்டிப்பா நான் அவனை அழிக்க முயற்ச்சிப் பண்ணுறேன் பாஸ்டர்.” நான் பாஸ்டர் விக்டருக்கு ஆறுதல் சொல்லி விட்டு வெளியே வந்தேன். என்னுள் தீர்மானம் முளை விட்டிருந்தது. நான் அவனை அழிப்பேன். நான் அந்த ஆலமரப் பொந்துக்கு செல்லத் தயாரானேன்.

ராபினை சந்தித்தேன்.

“என்னோட துணைக்கு வர முடியுமா.?”

“ எனக்குக்கு பயமா இருக்குங்க. நான் சூசையவும் கூட்டிட்டு வரட்டுமா.?”

“சூசை யாரு.?”

“அவன் இந்த சர்ச்ல தான் கல்லறை தோண்டுற வேலை பாக்குறான்.”

“சரிதான் அவனும் வரட்டும்.”

“என்னைக்கு போறோம்.?”

“இன்னைக்கே. ரெடி ஆகுங்க.” நான் தாமதம் செய்யவே விரும்பவில்லை. எனது அறைக்கு சென்று எனக்கு தேவையானவற்றை ஒரு தோல்பையில் எடுத்துக் கொண்டேன். ராபின் சூசை இருவரும் எனக்கு முன்பே தயாராக இருந்தனர். சூசை கையில் குழி தோண்டும் கடப்பாரையை ஆயுதமாக எடுத்துக் கொண்டிருந்தான். நாங்கள் அந்த பிரம்மாண்ட ஆலமரத்தின் அடியில் புதைந்திருக்கும் பாழடைந்த கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். மேலே ஏறினோம். ஜூலி தனது டைரியில் சொன்னபடியே அங்கு பொந்து இருந்தது. உள்ளே இறங்க இறங்க கட்டிடத்தின் சிதிலங்கள் தென்பட ஆரம்பித்தன. நாங்கள் மூவரும் உள்ளே இறங்கினோம். நான் மற்ற இருவரையும் எச்சரித்தேன்.

“தனியா எங்கையும் பிரிஞ்சிடாதீங்க. நாம சேர்ந்தே இருக்கணும். கவனமா இருங்க.” இருவரும் தலையாட்டினர். நாங்கள் மூவரும் தொடர்ந்து நடந்தோம். நாங்கள் அந்த குறிப்பிட்ட நிலவறையை அடைந்தோம். உள்ளே இறங்கினோம். உள்ளே..

அவன் படுத்திருந்தான். அழகாய் இருந்தான். அவனிடம் பேய்க்குரிய எந்த அம்சமும் காணமுடியவில்லை. பேயை நினைத்து வந்திருந்த இருவருக்கும் அவன் மனித உருவில் இருந்தது தைரியத்தைக் கொடுத்தது.

“தூங்குறான் போல, அவன் மண்டைல ஒரே போடா போட்டுடலாமா.?” என்றான் ராபின்.

“ஆமாம். அதான் சரி இங்கயே புதைச்சு சிலுவைய போட்டுடலாம். என்றான் சூசை.”

நாங்கள் அவன் அருகில் நெருங்கினோம். சூசை கடப்பாரையை ஓங்கினான். தூங்கிக் கொண்டிருந்தவன் திடிரென கண் விழித்தான். விளித்து எங்களைப் பார்த்தான்.

“ஆ.. அவன் எந்துச்சுட்டான்.” என கூவினான் சூசை.

அங்கு கெட்ட ரத்த வாடை வீச ஆரம்பித்தது. வவ்வால்கள் எங்கிருந்து வந்தது என தெரியாமல் வந்து அங்கு பறக்க ஆரம்பித்தன. மைர்கூசொரியும் படி அவன் குரல் கேட்டது.

“ஓ.. நீங்க வந்துட்டீங்களா.?” அவன் உடல் கருப்பானது. மயிர்கள் அடர்ந்தது. விரல் நகங்கள் கூர்மை ஆகின. அவன் பற்கள் வெளியே வந்தது. அவன் வாய் ரத்த தாகத்தோடு திறந்தது. அவன் என்னைப் பார்த்தான்.

“வா.. ராஜா.. வா..” அவன் பயங்கரமாக சிரிக்கத் தொடங்கினான்.

-திகில் கூடும்

எழுதியவர் : அருள் ஜெ (30-Jan-20, 12:31 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 97

மேலே