நேதாஜி
நேதாஜி
அண்ணல் வழி எதிர்த்தாய்!
அஹிம்சை வழி மறுத்தாய்!
அன்னியருக்கு அன்னியரை
நண்பனாக்க முனைந்தாய்!
ஜெர்மனும்,ஜப்பானும்
சுதந்திரப் போரில் உதவ விழைந்தாய்!
தனக்கான பாணியில்
தனித்த கடும் பாதையில்
இனித்தமுடன் செய்தாய்
நெடுந்தூரப் பயணம்!
இன்னல் மிக்க பாதையில்
இரும்பு நெஞ்ச மனத்தினாய்
நொடிப் பொழுதேனும் கொண்டாயோ
இமை மூடி சயனம்!
தீச்சுடராய் நின்றொளிர்வாய்
இன்றும்
நீ நினைக்கப்படும் தருணம்!
உனைஅடைந்தேனா இல்லையா
என
குழம்பி சாகட்டும் மரணம்!