முதல் இரவு

மஞ்சமெங்கும் மலர்களின்
இறந்த காலம் ஆனால்
மனம் வீசும் மலர்களின்
ஏகாந்த வேளை

இடைவிடாது இருதயம் துடிக்க
இன்பம் தரும் இரவு இதுவென
நகம் கடித்தபடி
காத்திருக்கும் வேளை

உடல்கள் இரண்டின்
உள்ளங்கள் மகிழ்ந்து ஒன்றாய்
உறவிலே திளைத்திட
உவகை பொங்கிடும் வேளை

கடல் அலையென
ஆர்பரிக்கும் ஆசைகள்
கட்டுக்கடங்காத காமமும்
காதலும் கைகூடும் வேளை

தென்றலது புயலாய் மாறும்
புயலும் தென்றலாய் மாறும்
புயலும் தென்றலும்
பூஜ்யமாகும் வேளை

அச்சம் நீங்கி ஆசை பொங்கி
புள்ளிமானும் புலியும்
பசித்து புசித்து
அடங்கிடும் வேளை

புதிதாய் உண்டான
உறவொன்றின் உள்ளத்தில்
உனக்கென நான் என
உணர்ந்திடும் வேளை

இனித்திடும் இரவா
இல்லை கசந்திடும் இரவா
இதுவென காலமது
காட்டும் வேளை

எழுதியவர் : கருப்பசாமி (1-Feb-20, 9:20 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : muthal iravu
பார்வை : 61

மேலே