காதல்💓

காதல்💓

தீரா காதல் திடீரென்று வந்தது.
தித்திக்கும் காதல் திக்குமுக்கு ஆக்கியது.
மயக்கும் காதல் மாயமாய் வந்தது.
மனம் முழுவதும் மல்லிகைப்பூ மனக்குது.
இதயம் இனிமையாய் இசைக்குது
இன்பம் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுது.

நித்தம் உன் தரிசனம் கிடைக்க தவம் இருக்கும் பக்தனாக நான்.
உன் மின்னல் பார்வைக்கு ஏங்கும் பித்தனாக நான்.
உன் உதட்டோர சிரிப்பை கவிதையாய் ரசிக்கும் ரசிகனாக நான்.
உன் மின்னல் இடையை தென்றல் தீண்டும் காட்சியை தினம் காண துடிக்கும் உன் காதலனாக நான்.

ஐய்யகோ!
அழகு சுந்தரியே!
அப்படி என்னை பார்க்காதே.
உள்ளத்தில் உள்ள வார்த்தையை
உதட்டால் உச்சரிக்க என்னால் இயலவில்லை.
ஏனோ மூச்சு அதிகமாக இறைக்கிறது.
பதட்டம் அதிகரித்து
இதயம் படபடக்குது.
இதில் பாவம், ஆவல் அடிபட்டு போகிறது.

காதல் கள்ளியே!
உனக்கு தான் என்நிலை நன்றாக புரியுதே.
உனக்கு தான் நான் உன்னை காதலிக்கிறேன் என்று தெரியுதே.
ஆண் தான் காதல் சொல்ல வேண்டும் என்று அகராதியில் உள்ளதா என்ன?
பெண்னே! அழகிய, என் இதயகனியே! தயவு செய்து
கூறிவிடேன்
நீ என்னை காதலிக்கிறேன் என்று.
- பாலு.

எழுதியவர் : பாலு (2-Feb-20, 4:19 pm)
சேர்த்தது : balu
பார்வை : 167

மேலே