அழியும் அழகு
பொய்கையில் பூத்து குலுங்கும் தாமரை
பூப்பூவாய் பூத்து குலுங்கும் பூஞ்சோலை
வண்டுகள் மொய்த்திட என் மனம்
இவ்வழகைப் பார்த்து பார்த்து மகிழ்ந்திட
மாலை வந்தது காலையில் பூத்து
குலுங்கிய அத்தனைப் பூக்களும் மண்ணில்
வீழ்ந்தன அழகிழந்து ..... இறைவா
கண்ணும் மனமும் மகிழ பூக்கவைத்தாய்
மகிழ வைத்தாய் ஆனால் அழகை அழித்து
மனதை நோக்கவும் வைக்கிறாய்.... இதுதான்
மாயமா ஸ்திரமில்லா உலகில்