நிறமில்லாத வானவில் என் வாழ்க்கை 555

என்னவளே...




தினம் உன் விழிகள் என்னை
தேடுவதை நான் ரசிக்கிறேனடி...


உன் விழிகள் சொல்கிறது
என் மீதான காதலை...


உன் இதழ்கள் மட்டும் என்னை
நிராகரித்து கொண்டே செல்கிறது...



உன் இதயம்
என்னை வெறுக்கிறதா...


உன் உதடுகள்
என்னை வெறுக்கிறதா...


ஒருமுறை
சொல்லடி கண்ணே...


உன் புன்னகைக்கு மட்டுமே
நான் காரணமாக வேண்டும்...


உன்
கண்ணீருக்கு அல்ல...


என் வாழ்க்கை
இன்னும் தொடங்கவில்லை...


உன்னுடன் வாழும் போதுதான்
என் வாழ்ககை தொடங்கும்...


காத்திருக்கிறேன் நானும்
என் வாழ்க்கையும் உனக்காக...


நிறமில்லாத
வானவில் போல.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (4-Feb-20, 5:19 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1063

மேலே