மனித னை தேடி
சார் எங்கே?பெங்களூரா?
எங்கேயோ?
சாரி சார். தப்பாஎடுத்துக்காதீங்க.. எதிர் சீட்டு ல இருக்கிறதனால கேட்டேன்.
சைடு சீட்டுன்னா கேட்டு இருக்கமாட்டீங்களா?
விவகாரம்பிடிச்சஆளாஇருப்பான்போல இருக்கு. எனநினைத்துக்கொண்டேன்.
பெங்களூர் இன்டர்சிட்டி ரயிலில் பேச்சு கொடுத்து வாங்கி கட்டி கொண்டதுதான் மேலேநீங்கள் படித்தது.
சரி நமக்கு வாச்சது அவ்வளவுதான் என நினைத்து கொண்டேன்.
அடுத்த எதிர் சீட் டில் ஒன்பது வயதில் ஒரு மாணவன் அமர்ந்து இருந்தான்.
தம்பி என்ன பேர்?எனகேட்டேன்.
தலையைதூக்கி பார்த்து விட்டு தான் பார்த்து க் கொண்டுஇருந்த கைபேசி யில் மூழ்கினான்.
பயணத்தை மனித மனங்களோடு செலவிட ஆசை ப்பட்டேன். ஆனால் இங்கு யாரும் மனிதர்களாக இருக்க ஆசை படவில்லை. இயந்திரத்தோடு இயந்திரமாகத்தான்இருக்க விரும்புகிறார்கள்..
கண்ணை மூடிக்கொண்டு எனக்குள் இருக்கும் மனிதனை தேட ஆரம்பித்து விட்டேன்.