அவளுக்கும் அவள் அன்பனுக்கும்

நகமில்லாத விரலைகளை
நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது

விதவிதமான நகப்பூச்சுகள்
வாங்கிக் குவித்து
அழகுபார்க்கும் அவளுக்கு
மட்டுமல்ல
சொரியச் சொரியப்
புண்ணாகிபோன அரிப்பால்
அவதியுறும் அவள் கணவனுக்கும்கூடத்தான்.
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Feb-20, 1:43 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 437

மேலே