உன் நினைவுகள் மட்டும் எனக்கு சொந்தம் 555

என்னவளே...என் கைபேசியில் உன் குரல்
கேட்கும்போதெல்லாம்...


கோடி அருவி
என்னில்
கொட்டுமடி...இன்று உன்
குரல்போல் கேட்டால்...


கண்ணீர் கொட்டுதடி
என் கண்களில்...


அமாவாசை
இரவில் கூட...


இந்த நீலவானம் கடந்து
செல்கிறது நிலவில்லாமல்...


உன் நினைவு
இல்லாமல்
ஒரு இரவு கூட...


என்னால் உறங்க
முடியவில்லையடி...


நிஜமாக என்
வாழ்வில்
வந்தவள் நீ...


உன் நினைவுகளை மட்டும்
கொடுத்துவிட்டு சென்றுவிட்டாய்...


எனக்கு நிரந்தரமாக.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (8-Feb-20, 8:39 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1252

மேலே