உணர்வுகள்

அய்யய்யோ.....
அய்யய்யோ.. கொல்றாங்களே.....
என்ற குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு.....

அக்கம் பக்கத்தினர் குழந்தையை நோக்கி.... பதட்டத்துடன் ஓடி வந்தனர்...

ஆனால்... குழந்தையின் அம்மா ஜெயா மட்டும் பதட்டப்படவில்லை..

ஏம்மா... ஜெயா...என்ன பன்ற....?

குழந்தை ஏன்.., இப்படி சத்தம் போட்டு அழறா... ?

நீ பதட்டமே இல்லாம இருக்க...? என்று வந்தவர்கள் கேட்க :-

ஜெயா வந்தவர்களிடம் நடந்ததை கூறினாள்...

குழந்தையின் அழுகையும் கூச்சலும் நிற்கவில்லை...

அந்தநேரத்தில்... வெளியே சென்றிருந்த...
ஜெயாவின் கணவர் ஜெகன் வந்தார்...

( வீட்டின்முன் கூடியிருந்த கூட்டத்தையும், குழந்தையின் அழுகையும் பாா்த்துவிட்டு, தன் மனைவியிடம் )

ஜெயா - குழந்தை ஏன்டி இப்படி அழற... ?
எங்கம்மா எங்க போனாங்க...?

ஒரு நிமிஷம் ஜெகன்...சொல்ற...

அக்கா... அண்ணா...

நீங்களாம் போங்க... என்று வந்தவர்களிடம் ஜெயா சொல்லிக்கொண்டிருக்கும்போதே... ஜெகன்

ஏன்டி..., நான் என்ன கேக்குற, நீ என்ன பன்ற...?

ஒரு நிமிஷம் ஜெகன்...

என்னடி ஒரு நிமிஷம்... இரண்டு நிமிஷம்ன்னு....
குழந்தை இப்படி அழற... என்று கோபத்தில் ஜெகன்
ஜெயாவை அடிக்க கை ஓங்கினான்...

அந்த நேரத்தில்....
வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த ஜெகன் அம்மா

டேய்... டேய் ஜெகன்...
ஏன்ட அடிக்க போற..
கொஞ்ச நேரம் பொறுமையா-தான் இரு...
அவ என்ன சொல்ல வரான்னு கேளு...

அட நீங்க வேறம்மா...
விசயம் புரியாமா பேசறீங்க...
நான் பெத்த புள்ள எப்படி அழுவுறா...
அவ கொஞ்சம் கூட பதட்டமில்லாம....
ஒரு நிமிஷம்... ஒரு நிமிஷம்ன்னு சொல்ற...

யாருடா விசயம் புரியாமா பேசறா...?
நீ விசயம் புரியாம பேசற...
உனக்கு புள்ளனா...
அவளுக்கு புள்ள இல்லையா... ?
ஒரு நிமிஷம்ன்னு சொன்ன, கொஞ்சம் பொறுமையா இருக்க மாட்டீயா...?
எதற்கெடுத்தாலும் அடிக்க கை ஓங்குவியா...?
உன் பொண்ணு உனக்கு எப்படி பொக்கிஷமோ, அதே மாதிரி தான் உன் பொண்டாட்டியும்., எங்க அண்ணனுக்கு (உன் மாமனாருக்கு) பொக்கிஷம்... நீ பெத்தா தங்கம்.... மத்தவங்க பெத்தா தகரமாடா..? முதல்ல... என்ன நடந்ததுன்னு உன் குழந்தைகிட்டியே கேளு... அவளே சொல்லுவா...

அப்பா...

அம்மாவையும் பாட்டியையும் திட்டாத ப்பா...

சரிம்மா... திட்டல.. நீ ஏன் அழறேன்னு சொல்லு...

அப்பா... என் பஞ்சு பொம்ம பாப்பா இருக்குலா..

ஆமா இருக்கு... அதுக்கென்ன இப்ப...

அத... அம்மா கழுவுறேன்னு சொல்லி...
தண்ணியில போட்டு முக்கிட்டாப்பா.. பாவம்... பாப்பா.....
செத்துடும்ல... அதான்... அழுத.....
கொல்றாங்க... கொல்றாங்கன்னு..... அழுத...
நீ சொல்லுப்பா...
பாப்பா பாவம்தானா....

ஆமான்ட... பாப்பா... பாவம் தான்...
ஆனா அதுக்கு ஒன்னும் ஆகாதுடா....

ஏம்ப்பா...?

ஏன்னா... அது பொம்மடா...

அது அழுக்கா இருந்தது ல... அதான் அம்மா கழுவியிருப்பா...

அத தண்ணியில அழுத்தினா...
அதுக்கு ஒன்னும் ஆகாதாப்பா...?

ஆகாதுடா...

அதுக்கு உயிர் இல்லியாப்பா...?

உயிர் இல்லம்மா... அது வெறும் பொம்ம...
உயிரும் இருக்காது.... உணர்ச்சியும் இருக்காது...

அப்ப நான் விளையாடும்போது பாப்பாவுக்கு சோறு ஊட்டுவேன்ல...
அதுவும் சும்மாதானப்பா...?

ஆமான்டா... அதுவும் சும்மாதாண்டா...

அப்பா...
அப்ப தப்பு... என் மேலதாம்ப்பா...

அம்மா..
என்ன மன்னிச்சிடும்மா...
பாட்டி நீங்களும் என்ன மன்னிசிடுங்க...
உங்கள ரொம்ப கஷ்டபடுத்திட்ட...
மனச காயப்படுத்திட்ட...

அப்பா.. நீங்களும் அம்மா கிட்ட மன்னிப்பு கேளுங்க... நீங்க திட்டும்போது... அம்மா மனசு கஷ்டபட்டுருக்கும்ல...

ஜெயா.... சாரிம்மா...

ஜெகன்.. சாரி கேட்க வேண்டாம்... ஆனா முதல்ல கோபத்தை விடுங்க.. நீங்க உங்க உணர்ச்சிய திட்டி தீக்கிறீங்க... ஆனா நாங்க... என்ன நடந்தாலாம் பொறுமையா இருக்கனும்... பெண்ணா பொறந்தா பொறுமையா இருக்கனும்... ஆணா பொறந்தா அதிகாரத்துல இருக்கணும்... அதானே... உங்க இலக்கணம்.... அப்படியே சிலருக்கு... நீங்க அதிகாரத்தை கொடுத்தாலாம்... அதை பேருக்கும்-பெருமைக்கும் தான் கொடுக்கீறீங்க...

ஜெயா சரியா சொன்னம்மா....

ஜெகன் இனியாவது மத்தவங்களுடைய உணர்வுகளையும் புரிஞ்சு நடந்துக்கோ..
உன்னை சொல்லி தப்பில்ல ஜெகன்... ஒவ்வொரு மனிசனும் "குழந்தையா இருக்கும்போது உயிரற்ற பொருளைக் கூட உயிரா பாா்க்கிறா... அதே அவன் வளர வளர... உயிருள்ள பொருளக் கூட உயிரற்ற நிலையில தான் பாா்க்கிறான்..." சக மனிசன கூட, சாதி-மதம்-இனம் அப்டின்னு பிரிச்சு - சாதாரண அடிப்படை மனித உணர்வுகளைக் கூட சாகடிக்கிறா.....

ஒரு செய்தி உனக்கு தெரியுமா... ஒரு ஆபத்தில சிக்கின மனிசனுக்கு மனித குரங்கு கை கொடுக்கிறது... ஆனா பரிணாம வளர்ச்சியடைந்தோம் அப்டின்னு சொல்லிக்கிற நாம, உடலளவுதான் மாறியிருக்கிறோம்... ஆனா நம்முடைய உள்ளமும்... உணர்ச்சிகளும்... இன்னுமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கு... ஒருங்கிணைப்பு ...ங்கிறது தேசிய அளவில மட்டுமில்ல... மனதளவிலும் அமையனும்... அது மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற வகையிலும் அமையனும்.......!!!

- நட்புடன் கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (9-Feb-20, 10:02 am)
Tanglish : unarvukal
பார்வை : 253

மேலே