மாபெரும் கலைஞன்

கலைஞன் அவன் கலைஞன்
ஆகா/ மாபெரும் கலைஞன்
இயற்கையோடு ஒன்றிப்பான்
நம் இதயம் எல்லாம் துடித்து நிற்பான்
அவன் கலைஞன் மாபெரும் கலைஞன்
படைத்தான் அவன் அகிலம்
அழகிய கோட்டையாகி நிற்கிறது அகிலம்
என்னவொரு கைவண்ணம் அற்புதங்கள்
ஓன்று போல் ஓன்று இல்லை
அவன் கலைகளில் அவனே புலப்படுவான்
அவன் கலைஞன் மாபெரும் கலைஞன்

மனித மனங்களின் புனிதன் அவன்
ஆனாலும் நம் கண்கள் காணா கலைஞன்
கூப்பிட்ட குரலுக்கு செவி மடுப்பான்
நடமாடும் கலைஞன் அவன்
நாள்தோறும் நம்முடனே அவன்
வண்ணக் கலவையில் வானம் பூமி அத்தனையும்
வசமாகப் படைத்த கைதேர்ந்த கலைஞன் அவன்
அவன் கலைஞன் மாபெரும் கலைஞன்

நம் உள்ளத்தில் உள்ளதெல்லாம்
உரிமையுடன் தெரிந்து கொள்வான்
அன்புள்ள கலைஞன் அவன், அவனே இறைவன்.

எழுதியவர் : பாத்திமாமலர் (13-Feb-20, 11:43 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : maaperum kalaingan
பார்வை : 83

மேலே