நம்பிக்கை

நம்பிக்கையே வாழ்க்கை
மனைவி கணவன்மீது
கணவன் மனைவிமீது கொண்ட
அசையா நம்பிக்கையே நல்
வாழ்விற்கு அஸ்திவாரம்
நம்பிக்கையில் மலர்வது
காதலெனும் வாடா தாமரை
நம்பிக்கையில் ஒரு போதும்
சந்தேகம் என்ற நச்சு கொல்லியை
வந்திட இடம் கொடுத்தலாகாது
காதல் நம்மை வாழவைக்கும்
நம்பிக்கையே அதன் வித்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Feb-20, 6:26 am)
Tanglish : nambikkai
பார்வை : 101

மேலே