தலைமை ஆசிரியர்க்கு

பாசக் கதவை திறந்து வைத்து
நேச ஜன்னல்கள் வழியாக
இதயத்தை தூதனுப்பி
அன்பை வரவேற்கும் அன்பானவரே

பேனாக்களோடு ஆசிரியர்களையும்
இணைப்பிடித்து அறிவுரை கூறும்
ஆசானே

தலைமை ஆசிரியர் என்பதால் தான்
பள்ளியில் பாச மையை ஊற்றினாயோ
அதனால்தான் நாங்கள் தினமும்
நேசத்தை எழுதுகிறோம்

வருடங்கள் தோறும்
வாழ்த்து அனுப்பும்
இதய அஞ்சலே
பெறுகிறேன் வாழ்த்தோடு வளமையும்

பச்சை கையெழுத்து போலவே
உங்கள் எண்ணமும் பசுமைதான்

புத்தகத்தோடு உங்கள் பெயரையும் சேர்த்து படிக்கின்றேன்
உரைநடையாக
நீங்கள் ஆசிரியர்கள் நெஞ்சில்
உறைந்திருப்பதால்...

BY ABCK

எழுதியவர் : (15-Feb-20, 11:00 am)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 16

மேலே