புல்வாமா

புல்வாமா புல்லட்டுகளே
இதயம் இல்லையா
இரக்கம் இல்லையா
பாய்ந்து கொன்றீர்களே
தேசத்தின் எல்லை வீரர்களை

தேசிய நெடுஞ்சாலைகள் எங்கும்
இரத்தச் சுவடுகள்
காஷ்மீர் ரோஜாக்கள் சிவப்பாய் போனதற்கு இதுதான் காரணமோ
தேசங்களை பாதுகாத்ததற்கா
வெடிமருந்தை பரிசளித்தீர்கள்

தேசமே கதறியது
பாசக் கண்ணீரை துடைக்க முடியாமல்
சுவாசக் கண்ணீரின் வடியலோடு

பிப்ரவரி 14 வரும் போதெல்லாம்
நெஞ்சங்கள் எங்கும்
குண்டு துளைத்த சத்தம்தான்
நினைவுக்கு வருகிறது

இனியாவது புல்வாமாவில்
தோட்டாக்கள் ஓய்வெடுத்து
துப்பாக்கிகள் தூங்கட்டும்

மகிழ்ச்சிகள் விழித்தெழுந்து
காஷ்மீர் பனித்துளியைப்போல
வெண்மையாக மாறட்டும்...

BY ABCK

எழுதியவர் : (15-Feb-20, 11:02 am)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 11

மேலே