பாய்ந்த ஏவுகணை

பாய்ந்த ஏவுகணை
சாய்ந்து தூங்க்குதோ
அறிவியல் மூளை
ஆலயம் ஆனதோ

மலர் மாலை வாங்கிய
தோள்களுக்கு
மலர்களை தூவியதுதான்
வேதனை

விஞ்ஞானத்தின் பெருமூளை
இங்கு ஓய்வெடுக்கின்றது
துடிக்கிறது என் இதயம்
உங்கள் நினைவாக ஓய்வில்லாமல்

ஆராய்ச்சி ஆய்வகமே
அறிவியலின் தாயகமே
ஏவுகணையின் நாயகனே
அக்னி சிறகுகளின் ஆசானே

உன் புத்தகத்தை படித்ததால்
என் சிறகை விரிக்கிறேன்
ஒருமுறை உயரம் தொட...

BY ABCK

எழுதியவர் : (15-Feb-20, 11:05 am)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 12

மேலே