காதலிக்கிறேன் வாழ்க்கையை

எட்டி நின்று பார்த்ததும்
உன் சிறகுகளால் நீ அழைத்து
என்னைத் தொடர வைத்தாலும்
சலிக்காமல் செல்கிறேன்

என்னைத் தொட்டு தள்ளிவிட்டு
விலகிச் சென்று நின்றாலும்
என் சிரிப்பும் குறையாது
உன்மீது காதலும் தேயாது

கதவுகளை ஒவ்வொன்றாய்
நீ மூடி சென்றாலும்
புதுப்புது கதவுகளால்
உன்னைப் பார்த்திடுவேன்

விடை தெரியா சிக்கல்கள்
எதிர்பாராமல் வந்தபோதும்
நான் இருக்கிறேன் என்று
தோள் தட்டிச்சென்றாயே

வெற்றியென்னும் கைகொடுத்து
முயற்சிகளை ஏற்றிவிடும்
உன்னிடம் தோற்காமல்
வேறுயாரிடம் தோற்பேன்

எழுதியவர் : ரா.சா (15-Feb-20, 12:03 pm)
சேர்த்தது : ராசா
பார்வை : 533

மேலே