நீ வருவாய் என

என் நிழலென்று
உன்னை தொடுகிறேன்...
என் நிலம் தான்
நீயென்று உணர்கிறேன்...

மடி தூங்கும்
மழலையாய்...
உன் மடி சேர
மனம் துடிக்குதடா...

உறக்கம் இன்றி...
கனவுகளும்...
இது பகலா இரவா என்று
நகைக்குதடா...

மழையில் நனைந்த
மலராய்
குளிர்ந்து இருப்பேன்
உன் அருகில்...

மயக்கம் தரும்
இசையாய்
மது உண்டிருப்பேன்
உன் இதழில்...

வானவில்லின்
வண்ணம் எடுத்து...
நம் வாழ்வினில்
கொஞ்சம் பூசிக்கொள்வோம்...

களைந்து போகும்
மேகம் தாண்டி
நிலையான
வானம் என்றாவோம்..

மலரோடு பிணைந்திருக்கும்
வாசம் போல்...
உன்னோடு இணைத்திருக்கும்
வரமே வேண்டும்...

காத்திருக்கிறேன்
விண்மீனாய்...
பகல் களைந்த இரவாய்
என்று நீ வருவாய் என...!!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (15-Feb-20, 1:56 pm)
சேர்த்தது : devirajkamal
Tanglish : nee varuvaay ena
பார்வை : 0

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே