சில இடங்களில் கூச்சல்கள் கூட சுகமே

சில இடங்களில் கூச்சல்கள் கூட சுகமே
( யாருக்கு உதவி செய்ய நினைத்தாலும் அந்த உதவியினால் அவர்களுக்கு பயன் உள்ளதா என நினைத்து உதவி செய்யவும். அல்லது ஒன்றை பார்த்து இப்படி இருக்கிறதே என வருத்தப்படாதீர்கள், ஏனென்றால் அப்படி இருந்தால்தான் அந்த இடத்துக்கு சரி )
என்ன ஒரே அறிவுரையாக இருக்கிறதே என நினைத்து விடாதீர்கள் எல்லாம் அனுபவம்தான். எங்கள் காலனியில் சுமார் இருநூற்றுக்கு மேற்பட்ட வீடுகள், அல்லது பங்களாக்கள் கொண்டது. பெரும்பாலும் என்னைப்போல் ஓய்வு பெற்றவர்கள் தான் அதிகமாக இருப்பர். எங்கள் தெருவின் ஒரு பகுதியைத் தவிர மற்ற பகுதிகள் அமைதியாகத்தான் இருக்கும்.
எங்கள் காலனியில் படித்தவர்கள் அதிகம். பெரிய பெரிய உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் அதிகம். அடுத்து என்ன? வழக்கம்போல உள் அரசியல்தான், காலனி அசோசியேசன் பதவிக்கு போட்டி பொறாமைகள் உண்டு. ஒருவருக்கொருவர் புறம் பேசுவதும் உண்டு. இது எல்லா காலனிகளிலும் உண்டு என்றாலும் எங்கள் காலனியில் கொஞ்சம் அதிகமோ என அடிக்கடி தோன்றும்.
காலை நடை பயிற்சியில் இருக்கும்போது என்னிடம் “யோவ்” ராமசாமி ! உன் தெரு கடைசியில் அந்த ஓட்டு வீட்டுல என்னய்யா ஒரே சத்தமா இருக்கு ? எப்ப பார்த்தாலும் “ஒரே நாஸ்டி” பேசாம அவங்களை காலி பண்ண வைக்கணும்யா. இவங்களால நம்ம காலனிக்கே கெட்ட பேரு ! நான் ஒன்றும் பேசவிலை, ஏனென்றால் பேசிக்கொண்டு வந்தது அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர். அவரிடமும் ஒரு மனப்பான்மை உண்டு, என்னவென்றால் அவருடைய பதவியை விட பல படிகள் கீழ் இருந்து பணி புரிந்து ஓய்வு பெற்ற என்னைப் போனறவர்களிடம் எல்லாம் பழக வேண்டியிருக்கிறதே? இது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்காதீர்கள். அவரைப்போல பதவியில் இருந்து ஓய்வு பெற்று கொஞ்சம் தள்ளியிருந்த காலனி நண்பரிடம் இதைப்பற்றி பேசியிருக்கிரார்.
அது அரசல் புரசலாய் என் காதுகளில் வந்து விழுந்து தொலைக்கிறது. அதனால் பேசாமல் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். பணியில் இருக்கும் போதும் அப்படித்தான் இருந்தேன். இல்லாவிட்டால் அமைதியாக பணி ஓய்வு பெற விட்டிருப்பார்களா ? மற்றபடி அவர் குற்றம் சாட்டிய குடும்பம் என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டது.
அந்த குடும்பம் பெரிய குடும்பம், வயதான தம்பதி, அவர்களுக்கு இரண்டு ஆண்கள், ஒரு பெண். அனைவருக்கும் கலயாணம் ஆகி விட்டது. மூவருக்கும் குறையாமல் மூன்று குழந்தைகள் இருப்பர். பெண்ணுடைய கணவனும் அந்த கூட்டத்துக்குள் ஐக்கியமாகிவிட்டான். காலை எழுந்தது முதல் இரவு வரை ஒரே சத்தமாகத்தான் இருக்கும். யார் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாது. சில நேரங்களில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதும் உண்டு. நாங்கள் பயப்படுவது கூட உண்டு. எங்கே “கொலை கிலை” விழுந்து விடுமோ என்று. எல்லாம் ஒரு அரை மணி நேரம்தான். அப்புறம் பார்த்தால் இவர்களா இப்படி சண்டையிட்டார்கள் என்று தோன்றும்.
இந்த சண்டையில் அதிகம் வசவு வாங்குவது அந்த வயதான தம்பதிகள் தான். எனக்கு பாவமாய் இருக்கும். அதுவும் அந்த ஆண் வாரிசுகளும், அவன் மனைவிமார்களும் அந்த பெரிசுகளிடம் போடும் சண்டையை பார்த்தால் எங்கே அந்த வயதானவர்கள் அடிபட்டு கீழே விழுந்து விடுவார்கலோ என கவலையாயிருக்கும். அப்புறம் பார்த்தால் அந்த பெரிசுகளை சுற்றி உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.
ஒரு உண்மையை சொல்லிவிட வேண்டும். அந்த குடும்பம்தான் இந்த காலனி காடாயிருக்கும் போதே முதலில் தைரியமாய் குடி வந்தது. அதற்கு பின்னால் பல வருடங்கள் கழித்தே, பயந்து பயந்து நாங்கள் ஒருவர் ஒருவராக வீடு கட்டி குடி வந்தோம். அதை இப்பொழுது வசதியாய் மறந்து அவர்களை காலி செய்யவேண்டும் என்று அடிக்கடி பேசிக்கொள்கிறோம்.
அன்றும் அப்படித்தான் ஒரே கூச்சலாய் இருந்தது. தெருவில் அவர்கள் வீட்டை அடுத்து நான்கு வீடுகள் மட்டுமே தள்ளி இருந்ததால் எனக்கு வீட்டுக்குள் இரைச்சல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. என் மனைவியின் முகத்தை பார்த்தேன், அவள் எந்த சலனமும் இல்லாமல் இருந்தாள். சே..நாம எல்லாம் இருக்கறதா இல்லையா? என்ன குடும்பமோ, என் வாய் முணு முணுத்தது.. சத்தம் காதில் வாங்கினாலும் பதில் ஒன்றும் வரவில்லை என் மனைவியிடமிருந்து.
சரி அவள் கவலை அவளுக்கு, எங்களுக்கு பிறந்த பையனும், பெண்ணும், திருமணமாகி வெளி நாடுகளில் தங்கி விட்டனர். எப்பொழுதாவது ஒரு முறை வந்து எட்டிப் பார்த்து செல்வர். அதற்கே அந்த ஆர்ப்பாட்டம், “லீவ் கிடையாது”, உடனே போக வேண்டும், என்று. அவர்கள் பெற்ற குழந்தைகளையாவது அருகில் விடுவார்களா ? தாத்தாவை தொந்தரவு செய்யாதே, பாட்டியை தொந்தரவு செய்யாதே, என்று விலக்கியே வைத்திருப்பார்கள்.
சத்தம் அதிகமாக இருந்தது. சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தேன். என்னைப் போலவே அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் அந்த வீட்டை நோக்கி படையெடுக்க தயாராய் இருந்தார்கள். நான் வெளியே வந்து அவர்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க அதுவரை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தவர்கள் ஏதோ நான் இவர்களுக்கு தலைமை தாங்குவது போல என் பின்னால் நடந்து வந்தனர். அங்கு அந்த வயதான தம்பதிகளை சுற்றி அவர்களுடைய வாரிசுகளும், அவர்கள் மனைவிமார்களும் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.
ஏனிப்படி சண்டையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? என்னுடைய சத்தத்தில் கொஞ்சம் அந்த இடம் அமைதியானது. அவரவர்கள் தங்களுக்குள் முணு முணுத்துக்கொண்டு மெல்ல அந்த இடத்தை விட்டு விலகினர். எனக்கு அந்த வயதான தம்பதிகளை பார்க்க பரிதாபமாக இருந்தது. இதற்கு ஒரு வழி காண வேண்டும் !. தினம் தினம் இந்த வயதான தம்பதிகள் இவர்களிடம் மாட்டிக் கொண்டு படாத பாடுபடுவது பார்க்க பரிதாபமாக இருந்தது
நண்பன் பாலுவை பார்க்க சென்றேன் பாலு ஆரம்பத்தில் என்னோடு பணி புரிந்து கொண்டிருந்தவன். பிறகு பணியிலிருந்து விலகி வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது நல்ல நிலைமையில் உள்ளான். அவனிடம் இந்த வயதான தம்பதிகளை பற்றி சொன்னேன். அவர்களுக்கு ஒரு நல்ல முதியோர் இல்லம் இருந்தால் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். அவன் தன்னுடய செல்வாக்கால் ஏற்பாடு செய்து தருவதாக சொன்னான். மனசு நிம்மதியுடன் வீட்டுக்கு வருமுன் அவர்கள் வீட்டுக்கு சென்று அந்த வயதான தம்பதிகளை பார்த்து உங்களுக்கு ஒரு நல்ல இடமாக பார்த்து வைத்திருக்கிறேன். நீங்கள் அங்கு போய் இருங்கள். அப்பொழுது தான் உங்கள் அருமை இவர்களுக்கு தெரியும் என்று பெரிய “லெக்சர்” கொடுத்தேன். அதற்கு அந்த தம்பதியர் ஒன்றும் பேசாமல் இருந்தனர். மனசு சங்கடம் போலிருக்கிறது என்று நினைத்து சரி நான் வருகிறேன் என்று அவர்களிடம் விடை பெற்றேன்.
என் மனைவியிடம் இவ் விவரம் தெரிவித்தேன். அவள் இதெல்லாம் உங்களுக்கு வேண்டாத வேலை என்று சொன்னவள், அவர்கள் சந்தோசம் அவர்களுக்கு, அதை ஏன்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (15-Feb-20, 3:56 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 153

மேலே