உபதேசம் - தூரதேசம்

அம்மா வந்தாா்
மகனிடம் இருந்த கைபேசியை
வாங்கிவிட்டு படி என்றாா்...

அப்பா வந்தாா்
மகளிடம் இருந்த கைபேசியை
வாங்கிவிட்டு படி என்றாா்....

அம்மா-அப்பா இருவருமே
அவர்தம் பிள்ளைகளருகே -உடன்
அமர்ந்து படிக்க தொடங்கினாா்கள்...

கைபேசியின் - புலனத்திலும்
முகநூலிலும் வந்த தகவல்களை......

இப்படித்தான் உபதேசம் என்பது
சிலருக்கு எப்போதும் தூரதேசம்
சிலருக்கு மட்டுமே கைவசம்....!

- நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (16-Feb-20, 5:45 pm)
பார்வை : 98

மேலே