சாயம் போன நிழல்

நீ சாய்ந்த மார்பு
வெறும் கூடு இப்போது.....
நீ கோதிய இரவு
தேய்ந்தது இப்போது....
நீ சுவைத்த இதழ்கள்
காய்ந்தது இப்போது....
நீ அணைத்த துயரம்
தனிமையில் இப்போது...
என் நிழல்
வாழ்ந்த வீட்டில்
அவளின் நிஜம் இப்போது....
என் காதலின் தவிப்பில்
அவள் தாலியின்
சிணுங்கல் இப்போது....
என் கிசுகிசுத்த விசும்பலில்
அவள் கீச்சு சிரிப்பொலி இப்போது
நான் தந்த முத்தத்தில்
அவளின் ஈரம் இப்போது...
நான் திருத்திய மீசையில்
அவளின் கூந்தல் இப்போது...
நம் கூடலின் நினைவில்
அவளின் கர்ப்பம் இப்போது..
நுரை நான்
கடல் அவள்
அகல் விளக்கு நான்
நிலா அவள்
வாசலில் கோலம் நான்
உன் இதய வீடு அவள்
காகித பூ நான்
சுடர்க்கொடி அவள்...
உன் நினைவு நான்
உன் ஆன்மா அவள்...
நான் தவறவிட்ட நீ
தாங்கி பிடித்த அவள்
அவள் உன் வாழ்வின் வரம்
நான் நீங்கிய சாபம்....

எழுதியவர் : (16-Feb-20, 9:00 pm)
சேர்த்தது : ஆத்மதர்சனா
Tanglish : saayam pona nizhal
பார்வை : 65

மேலே