ஒரு கவிதை

மழலை மாறா குமரியாய்
பார்த்தேனுனை அன்பே
அன்று
மனதில் இயல்பாய் நின்றாய்
மருளும் விழிகள் கொண்டேஎனை
மதிமயங்கச்செய்தாய்
அன்று
அழகே என்று கண்டேன்
கள்ளமில்லாப்பேச்சில் ஒரு
கபடமில்லா சிரிப்பில்
கவிதைநயம் தந்தாய்அன்பே
அன்று
காலம் கடந்து வந்தாய்
இடையில் கொஞ்சம் பிரிவு
பின்
எதேச்சையில் கண்டேன் உனை
அசரடிக்கும் வடிவில் அங்கே
ஒரு அற்புதம்
நான் பார்த்த நிலவா இது
இல்லை
ஆளான மலரா என்றே
தடுமாறி நின்றேனடி
உள்ளம்
பாழாக கண்டேனடி
அழகில் வந்த ஓவியம் அடடா
அருகே நின்ற காவியம்
என்றால்
ஓரளவு தகுமே அன்பே
உனக்கவமை பெறுமே..

எழுதியவர் : Rafiq (17-Feb-20, 3:27 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : oru kavithai
பார்வை : 144

மேலே