இயற்கை

மலைப்பாறையின் சிறு விரிசலில்
ஆலின் பீஜம் அடைக்கலமானது எப்போது
யாரைவார்..... இதோ ஓர் சின்ன ஆலின் செடியை
என்முன்னே நிமிர்ந்து நிற்கின்றதே
உயரில்லா கல் எப்படி ஆளை உருவாக்கியது
கதை சொல்லுகிறது இதிகாசமாய்
இரணியன் கம்பத்தை ஜடமென்று நினைத்து
அடித்தபோது கம்பம் பிளந்து நரசிம்மம் வெளிவந்து
இரணியன் மாய்ந்திட .....
கம்பம் வயிற்றில் உதித்த நரசிம்மம் ....
ஜடப்பொருள் என்பது எது உலகில்
உலகில் எங்கும் உண்டு உயிர்த் துடிப்பு
அதைக் காண தவறுவது நம் தவறு!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Feb-20, 7:27 pm)
Tanglish : iyarkai
பார்வை : 605

மேலே